12.3 C
Scarborough

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் ; நாமல் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Must read

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நாளை (28) புதன்கிழமை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கிரிஷ் குழுமத்திடமிருந்து சுமார் 70 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வழக்கின் தொடர் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பிணை தொடர்பான பரிசீலனைகளுக்காக நீதிமன்றம் அவரை நாளையதினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article