இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,295 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிகளவாக 54,783 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் தென் மாகாணத்தில் 14,954 பேரும், மத்திய மாகாணத்தில் 10,549 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 8,629 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவாக 22,094 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்தோடு கொழும்பு மாவட்டத்தில் 20,453 பேரும், கண்டி மாவட்டத்தில் 8,398 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,593 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
