11.2 C
Scarborough

பாகிஸ்தானை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதியில் விளையாட தகுதிபெற்றது இலங்கை!

Must read

லாகூர், கடாபி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மீண்டும் மோதவுள்ளன.

டில்ஷான் மதுஷன்கவின் 5 விக்கெட் குவியலும் கமிந்து மெண்டிஸின் ஆட்டம் இழக்காத அரைச் சதமும் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

பாகிஸ்தான் நிர்ணயித்த 111 ஓட்டங்கள் என்ற மிகக் குறைந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ (16) ஆகிய இருவரும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (8) ஆகிய இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (62 – 2 விக்.)

தொடர்ந்து கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

கமிந்து மெண்டிஸ் 60 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 62 ஓட்டங்களுடனும் பவன் ரத்நாயக்க 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட ஹசன் நவாஸ் (17), ஷஹீன் ஷா அப்றிடி (15) ஆகிய இருவரே 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவிச்சில் டில்ஷான் மதுஷன்க 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சஹான் ஆராச்சிகே 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

டில்ஷான் மதுஷன்க தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து ஆட்டநாயகனானார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article