11.2 C
Scarborough

பிரான்ஸில் போராட்டங்கள் வன்முறையாக மாறின – 1,000-க்கும் மேற்பட்டோர் கைது!

Must read

பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிராக சனிக்கிழமை (17) நடைபெற்ற பாரிய போராட்டங்கள் பல பகுதிகளில் கடுமையான வன்முறையாக மாறியுள்ளன.

பிரான்ஸ் முழுவதும் சுமார் ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் போராட்டங்களில் பங்கேற்றதாக பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சுமார் ஆயிரத்து இருநூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், சுமார் 150 பொலிஸார் மற்றும் ஜெண்டர்ம்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

தலைநகர் பாரிஸில் மாலை வேளையில் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் உள்ளிட்ட கலகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

லிமோஜஸ் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரையானதுடன், அதன் பெரும்பகுதி தீயினால் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோன் நகரில் உள்ள சுற்றுலா அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மார்செய், லில் மற்றும் அங்கர்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில நகராட்சி கட்டடங்களிலும் அத்துமீறல்கள் மற்றும் சேதப்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

செயின்ட்-எட்டியன் நகரில் நடைபெற்ற மோதலின்போது 17 வயதுடைய போராட்டக்காரர் ஒருவரின் கை பலத்த காயத்துக்குள்ளாகி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான பிரான்ஸின்  தேசிய பொலிஸ் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இடம்பெற்ற இந்தப் போராட்டங்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பான அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடம்பெற்றுள்ளன. போராட்டங்களில் பெரும்பாலானோர் அமைதியான முறையில் பங்கேற்ற போதிலும், சில பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article