11.2 C
Scarborough

நாடு தழுவிய மின்விநியோகத் துண்டிப்பு குறித்து ஒரு மாதத்திற்குள் முழுமையான விசாரணை அறிக்கை!

Must read

நாடு தழுவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) திடீர் மின்விநியோக துண்டிப்பு குறித்த முழுமையான விசாரணை அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டு மையத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த விரிவான விசாரணை அறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் ஒரு மாத காலத்திற்குள் கையளிக்கப்படும்.

மின் கட்டமைப்பு செயலிழந்ததற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான மின்தடைகள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளையும் இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்கும்.

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் மின் கடத்துகை கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் ஸ்திரமற்ற நிலை காரணமாக நாடு முழுவதும் முழுமையான மின் தடை ஏற்பட்டது.

மின்சார சபையினரின் தீவிர முயற்சிகளையடுத்து, சுமார் 10 மணித்தியாலங்களுக்குள் மின்விநியோகம் முழுமையாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.

மின்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான இறுதி தொழில்நுட்ப அறிக்கை அடுத்த ஒரு மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article