9.9 C
Scarborough

பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

Must read

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை  நெடுங்குடியிருப்பு பகுதியில் இன்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீப்பரவல் காரணமாக, அந்த வீடுகளில் இருந்த பெறுமதியான உடமைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article