12.9 C
Scarborough

க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சப்ரகமுவ மாணவர்களுக்கு வேறு தினத்தை வழங்க தீர்மானம் – பரீட்சைகள் திணைக்களம்!

Must read

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாத சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்றுத் திகதி வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (27) செவ்வாய்க்கிழமை அழகியல் பாட செய்முறை பரீட்சை நடைபெறுகின்றது.

குறித்த பரீட்சைக்கு அனர்த்தங்களினால் செல்ல முடியாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களை கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் குறித்த செய்முறை பரீட்சைக்கான வேறு ஒரு தினத்தை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article