9.9 C
Scarborough

விஜய் மீது வழக்குப்பதிவு!

Must read

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி சாலை வலம் சென்றதாக மாம்பலம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தவெக தலைவர் விஜய் சென்னையில் நேற்று (ஏப்.15) தி.நகர் வேட்பாளர் என்.ஆனந்த், ஆயிரம் விளக்கு வேட்பாளா் ஜே.சி.டி. பிரபாகர், எழும்பூர் வேட்பாளர் ராஜ்மோகன் ஆகியோருக்கு சாலை வலம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், ‘அனுமதிக்கப்பட்ட நிகழ்வுக்கு பதிலாக நிபந்தனையை மீறி சாலை வலத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் கடும் இடையூறு ஏற்பட்டது’ என்று, தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தோஷ் குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், தவெக தலைவர் விஜய், தி.நகர் வேட்பாளர் என்.ஆனந்த் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article