6.7 C
Scarborough

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

Must read

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்பதிவாளர்  திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஆட்பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்றைய தினம் முதல் வழமை போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, கடந்த 17-ஆம் திகதி முதல் அடையாள அட்டை விநியோக சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆட்பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article