9.3 C
Scarborough

எரிபொருள் விலை அதிகரிப்பு – ஐஓசி!

Must read

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று சனிக்கிழமை (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததை அடுத்து, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பின் கீழ் லங்கா ஓட்டோ டீசல் மற்றும் 92 ரக பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் மாத்திரம் திருத்தப்பட்டுள்ளன. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 492 ரூபாய் எனவும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

குறித்த இரண்டு வகை எரிபொருட்களைத் தவிர, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article