7.3 C
Scarborough

ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம்!

Must read

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது.

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற கொழும்பு , கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓய்வுதியர்களே ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த வருட (2025) வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவில்லை எனவும் 2025 ஜனவரி முதலாம் ஆம் திகதியின் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரிய அளவில் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக,   2020  – 2024 காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஓய்வூதிய சம்பள முரண்பாட்டை நீக்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article