9.3 C
Scarborough

பொகவந்தலாவையில் பஸ் விபத்து-34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Must read

பொகவந்தலாவை, பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை கெம்பியன்  இராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்

பொகவந்தலாவை சென்மேரீஸ் தேசிய கல்லூரி, ஹோலிரோசரி தமிழ் மகாவித்தியாலயம், தர்மகீர்த்தி வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொகவந்தலாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article