10.8 C
Scarborough

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை!

Must read

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

2023/2024 கல்வியாண்டுக்கான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த இணைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை நேர்முகப்பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

நேர்முகப்பரீட்சைக்காகத் தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.moe.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article