17.8 C
Scarborough

ஈரானுடனான ‘அதிமுக்கிய உடன்பாடு’ எட்டப்பட்டது – டிரம்ப் அறிவிப்பு!

Must read

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் “அதிமுக்கிய உடன்பாடு”  எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான இறுதி ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நலன்கள் தொடர்புடைய இலக்குகள் மீது ஈரான் பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான பதற்றநிலை உருவாகியது.

இதற்கிடையில், அமெரிக்காவுடனான மோதலைத் தொடர்ந்து உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதாக அறிவித்தது. இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உயர்வடைந்தன.

பதற்றத்தை தணிக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. தற்காப்பு நடவடிக்கையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள சில அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலடியாக ஈரானின் பந்தர் அப்பாஸ், சிரிக், மினாப், குவாசம் தீவு, கொர்ஜன் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டதாகவும், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாகவும் அறிவித்ததாக கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article