இன்று (29) புதன்கிழமை முதல் கோதுமை மாவு விலையை அதிகரிப்பதாக பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ பிறீமா மில்க் பிராண்ட் கோதுமை மாவின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய சில்லறை விலை 220 ரூபாவில் இருந்து 225 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதிகரித்த போக்குவரத்துச் செலவுகளினால் இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
