4.5 C
Scarborough

வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கு கனடா ஒத்துழைக்கும் கனடா!

Must read

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் (Iran) தொடுக்கக்கூடிய தாக்குதல்களில் இருந்து வளைகுடா நாடுகளைப் பாதுகாக்க கனடா (Canada) அழைக்கப்படலாம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஜென்னி காரிக்னன் (Gen. Jennie Carignan) தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா (U.S.) மற்றும் இஸ்ரேல் (Israel) முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) தாக்குதலில் கனடா பங்கேற்கவில்லை என்றார்.

இருப்பினும், வளைகுடா நாடுகளுக்குப் பாதுகாப்புத் தேவைப்படும் பட்சத்தில் இராணுவ ரீதியான உதவிகளை வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாகப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கருத்துத் தெரிவிக்கையில், நட்பு நாடுகளுக்குத் தேவைப்படும் போது கனடா துணை நிற்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

இராணுவப் பங்களிப்பை இப்போதே முற்றாக மறுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார் அதனால், கனடாவும் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசித்து வருகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article