ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் திட்டமிடலில், அமெரிக்கப் படைகளுடன் பரிமாற்ற அடிப்படையில் (Exchange Officers) பணியாற்றும் கனடிய இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கனடிய பிரதமர் Mark Carney ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தாக்குதல் திட்டமிடலில் கனடா நேரடியாகப் பங்கேற்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
தற்போது 18 கனடிய ஆயுதப்படை (CAF) வீரர்கள் பஹ்ரைன் (Bahrain) மற்றும் கட்டாரில் (Qatar) உள்ள அமெரிக்க தலைமையகங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அதிகாரிகள் தாக்குதல் இலக்குகளைத் தீர்மானிப்பதில் (Targeting process) உதவியிருக்கலாம் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Denis Thompson கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் திட்டமிடலில் கனடிய வீரர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என கனடிய பாதுகாப்புத் துறை (DND) திட்டவட்டமாக மறுத்துள்ளது.

