2.7 C
Scarborough

மகேஷ் பாபு கால்ஷீட் பெற தயாரிப்பாளர்கள் கடும் போட்டி!

Must read

மகேஷ் பாபுவின் கால்ஷீட் தேதிகளை பெற தயாரிப்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் மகேஷ் பாபு. இப்படம் உலகளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கிறது. இப்படத்துக்கு பின்பு மகேஷ் பாபு எந்தவொரு படத்தினை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், ‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் கால்ஷீட்டை பெற்றுவிட வேண்டும் என்ற போட்டி தயாரிப்பாளர்கள் மத்தியில் தொடங்கியிருக்கிறது. இதுவரை சன் பிக்சர்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. ஆனால், இயக்குநராக யாருடைய கதையினையும் மகேஷ் பாபு கேட்கவில்லை.

‘வாரணாசி’ படத்தின் உலகளாவிய வியாபாரத்தினை முன்வைத்து, அடுத்த படத்தினை வியாபாரம் செய்துவிடலாம் என்பது தான் தயாரிப்பாளர்களின் திட்டம். ஆனால், மகேஷ் பாபு இப்போது யாருக்கு தேதிகள் கொடுக்கவுள்ளார் என்பது தான் இப்போது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article