6.2 C
Scarborough

சினிமாவில் 25 ஆண்டுகள் – ஸ்ரேயா சரனின் நிறைவேறாத அந்த கனவு!

Must read

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவரும் நடிகை ஸ்ரேயா சரண், இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

ஒரு மகளுக்கு தாயான ஸ்ரேயா, தற்போது தாய் மற்றும் மனைவி போன்ற வேடங்களில், மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பைத் தவிர, அவர் பயிற்சி பெற்ற ஒரு பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்.

இதற்கிடையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நடனம்தான் தனது முதல் காதல் என தெரிவித்தார். இதுவரை நடிக்க வாய்ப்பு கிடைக்காத, இன்னும் கனவாக இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, அவர் “ஒரு நடனக் கலைஞரின் வேடம்” என கூறினார். ’ஒரு நடனக் கலைஞரின் வாழ்க்கை, பயணம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க விரும்புகிறேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article