6.7 C
Scarborough

அபுதாபி ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்த சிவகார்த்திகேயன்!

Must read

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் ‘குட்​பேட் அக்​லி’ படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது. அபுதாபி, பார்​சிலோ​னா, மலேசியா உள்பட பல்​வேறு நாடு​களில் நடந்த கார் பந்தய போட்​டிகளில் தனது அணி​யினருடன் கலந்து கொண்ட அவர் இப்​போது, 24 ஹெச் சீரிஸ்- மத்​திய கிழக்கு டிராபிக்​கான பந்​த​யத்​தில் கலந்​து​கொண்​டிருக்​கிறார்.

ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார். அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article