7.3 C
Scarborough

திருமலையில் பிக்குகளுக்கு எதிராக அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டதா? பிரதமர் நிராகரிப்பு!

Must read

திருகோணமலை சம்பவத்தின்போது அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் நிராகரித்தார்.

சாதாரண சட்டத்தின்கீழேயே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நேற்று கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

அவசர கால சட்டம், அடக்குமுறைக்காக பயன்படுத்தப்பட்டது
எனவும், திருகோணமலையில் பிக்குகள்கூட அச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டனர் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.

ஊடக அடக்குமுறைக்கும் அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என அவர் குற்றஞ்சாட்டினார்.

இவற்றையே தமது உரையின் போது பிரதமர் நிராகரித்தார்.
அத்தியாவசிய சேவையை தடையின்றி முன்னெடுக்கவே அவசரகால சட்டம் நீடிக்கப்படுகின்றது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article