7.3 C
Scarborough

அவசரகாலச் சட்டம் ஒருபோதுமே அடக்குமுறை கருவியாக மாறாது! – ஜனாதிபதி அநுரகுமார உறுதி

Must read

மீள்கட்டியெழுப்பும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் எனவும், அது ஒருபோதும் அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

கண்டி நியங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற டித்வா சூறாவளியால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களின் மீள்குடியமர்த்துவதற்காகக் காணி வழங்குதல் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

” சர்வதேச உறவுகள் வலுவாக இல்லாததால் அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டுள்ளன. நாங்கள் மிகவும் வலுவான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறோம். எனவே, பலர் இப்போது நாட்டுக்குச் சாதகமான அரசியல் கோஷங்களை இழந்துவிட்டனர். எனவே, அவர்கள் அதிகாரத்துக்கான ஒரே பாதையாக இனவாதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

விசேட சட்டங்களை இயற்றுவதற்குத் தேவையான அதிகாரங்களை அரசமைப்பு வழங்குகின்றது. பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் சிறப்புச் சட்டங்களை இயற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. இது போன்ற பேரழிவிலிருந்து மீள்வதற்கு, சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் தேவை. அதனால்தான் அவசரகாலச் சட்டத்தை விதித்தோம்.

ஆனால் வரலாற்றில், அவசரகாலச் சட்டங்கள் பெரும்பாலும் தொழிற்சங்க இயக்கங்களைப் பலவீனப்படுத்தவும், ஊடகங்களை அடக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த நோக்கத்துக்காக நாங்கள் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தவில்லை. இந்தக் கட்யெழுப்பும் செயல்முறை இன்னும் முடிவடையாததால், அடிப்படைப் பணிகள் முடியும் வரை அவசரகாலச் சட்டத்தை நாங்கள் செயற்படுத்தி வருகின்றோம்.

அது ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article