2.8 C
Scarborough

அமெரிக்காவின் குடிவரவுத் துறை சோதனைகள் குறித்து கனேடிய அமைச்சர் காட்டம்.

Must read

Minnesota வில் அமெரிக்கப் படைகளின் ஒடுக்குமுறை நடவடிக்கையினால் இரண்டு குடியிருப்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, தாம் எந்தத் தீர்ப்பையும் வழங்கப்போவதில்லை என்று கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree தெரிவித்துள்ளார்.

​இருப்பினும், குடிவரவு விதிகளின் கீழ் ஒருவரை நாட்டிலிருந்து வெளியேற்றும் போது, சட்டத்தின் மீதான கனடாவின் மரியாதையை அவர் உடனடியாக தற்காத்துப் பேசினார். “நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், கனடா என்பது Minnesota அல்ல,” என்று இந்த வார தொடக்கத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் Anandasangaree கூறினார்.

எனினும், அமெரிக்காவின் இந்த விமர்சனத்திற்குரிய நடவடிக்கைகள் காரணமாக, கனேடியப் பாதுகாப்பு முகவர்கள் தற்போது அமெரிக்க அதிகாரிகளுடன் குறைவான புலனாய்வுத் தகவல்களையே பகிர்ந்து கொள்கின்றனர் என்ற கருத்தை Anandasangaree மறுத்தார்.

​கனடாவின் நீண்ட கால வரலாற்றில் கனடாவும் அமெரிக்காவும் தற்போது ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வருகின்றன என்பது உண்மைதான், இது குறித்து பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார், என்று அவர் மேலும் கூறினார்.

Minnesota வில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் குறித்து கருத்து வெளியிட்ட Manitoba மாகாண முதல்வர் Wab Kinew, Minnesota வின் எல்லையை அண்டிய தனது மாகாண மக்களிடமிருந்து இவ்விடயமாக பல புகார்களைப் பெற்றுள்ளதால், இது குறித்து வியாழக்கிழமை Ottawa வில் நடைபெற்ற முதலமைச்சர்கள் கூட்டத்தில் தான் குரல் எழுப்பியதாக தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article