ராஜுமுருகன் – சசிகுமார் இணைப்பில் உருவாகியுள்ள ‘மை லார்ட்’ திரைப்படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகவுள்ளது.
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மை லார்ட்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. தற்போது பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

