2.8 C
Scarborough

தலைமைத்துவ ஆய்வில் வெற்றி!

Must read

September 2022-இல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர், Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது தலைமைத்துவத்திற்கான மிகப்பெரிய சோதனையை மிக எளிதாகக் கடந்துள்ளார்.

​வெள்ளிக்கிழமை இரவு Calgary இல் கட்சி உறுப்பினர்கள் நிறைந்திருந்த மண்டபத்தில், தேர்தல் பிரச்சார பாணியில் ஒரு எழுச்சியூட்டும் உரையை நிகழ்த்திய பின்னர், அவருக்கு ஆதரவாக 87.4% வாக்குகள் கிடைத்தன.

இந்த முடிவுகள் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஒரு செய்தியறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டன. கட்சி செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, சுமார் 95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

Poilievre ஆற்றிய சுமார் 50 நிமிட உரையில் கூட்டத்தினரின் பலமுறை கரகோசங்கள் மற்றும் Pierre என்ற முழக்கங்களுக்கு மத்தியில் Liberal கட்சியின் கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார். உயர்மட்ட வரிகள், இளைஞர் வேலையின்மை மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றிற்கு அக்கொள்கைகளே காரணம் என்று அவர் அரசாங்கத்தை குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், Conservative கட்சி கடந்த புதன்கிழமை வெளியிட்ட தகவலின்படி, 2025-ஆம் ஆண்டில் 3,27,000-க்கும் அதிகமான நன்கொடைகள் மூலம் சுமார் 48 மில்லியன் டாெலர்களைத் திரட்டி, கனேடிய அரசியலில் ஒரு புதிய நிதி திரட்டல் சாதனையை படைத்துள்ளது.

​இது குறித்து Poilievre விடுத்துள்ள அறிக்கையில், “மக்களின் இந்தத் தாராள மனப்பான்மை எங்களது இயக்கத்திற்கு வலுசேர்க்கிறது. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும், Liberal களை எதிர்கொள்ள இது எங்களைத் தயார்படுத்த உதவும் என்றும், Liberal கட்சியால் கைவிடப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article