14.8 C
Scarborough

கண்டியை உலக புராதன கேந்திரத் தலம் ஒன்றாக மாற்றுவதற்குத் திட்டம்

Must read

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

2035 ஆம் வருடமாகும் போது பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்தார்.

இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

“கந்த உடரட தேஜாத்வித அகநகரய (மலைப்பகுதியில் மலை நாட்டின் புகழ்பெற்ற தலைநகரம்)” எனும் இந்த கண்டி நகரில் சமய, கலாச்சார, வரலாற்று மற்றும் கலாச்சார உரிமைகள் பரவலாக உள்வாங்கப்படும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

கண்டி மாநகர சபை உட்பட உள்ளுராட்சி நிறுவனங்கள் 15 ஐ மையப்படுத்தியதாக 600 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தேச 168 திட்டங்களில் 13 திட்டங்களை கண்டி நகரத்திலும் செயற்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கு பொது வாகனத் தரிப்படங்களை நிருமாணிப்பதுடன் நுவரவெவ மற்றும் சிங்க ரெஜிமேந்து வளாகங்கள் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அண்மையில் பொது போக்குவரத்து வாகனத் தரிப்பிடங்கள் இரண்டை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டது.

பல்நோக்கு போக்குவரத்து வாகனத் தரிப்பிடம் அமைத்தல், ஹிருஸ்ஸகல சந்திக்கு அண்மையிலிருந்து வில்லியம் கொபல்லாவ மாவத்தை ஊடாக வைத்தியசாலை சந்தி வரையான வீதி அபிவிருத்தி, மஹிய்யாவை சுரங்கப்பாதை நிருமாணம், குடாரத்வத்த வீதி மற்றும் வில்லியம் கொபல்லாவ மாவத்தை அபிவிருத்தி, தென்னேகும்புறயிலிருந்து தர்மராஜ வித்தியாலயத்திற்கு அண்மையில் வரையான பிரதான வீதி ஆகியவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெறவுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article