16.3 C
Scarborough

வைத்தியர் அர்ச்சுனா ஒரு மனநோயாளி! வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரும் தயாசிறி

Must read

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மனநோயாளி என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இலங்கை பொலிஸார், நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் கடுமையாக உரையாற்றியிருந்தார்.

இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனங்களை வெளியிட்டனர்.

இதன்போது, எழுந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் தயாசிறி சுட்டிக்காட்டினார்.

அர்ச்சுனா, எம்.பிக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவேண்டியது அவசியம் என்றும் இதன்போது சபையில் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

இதேவேளை, சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் சபைக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர், அர்ச்சுனா “மூளை குழம்பிய தயாசிறி ஜயசேகர மற்றும் அவரால் மூளை குழப்பப்பட்ட பிமல் ரத்நாயக்க ஆகியோர் நான் உரையாற்ற வேண்டிய நேரத்தில் அவர்கள் இருவரும் அடிபட்டுக் கொண்டார்களே தவிர எனக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை” என மீண்டும் தெரிவித்துள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article