“என்ன நடக்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று காலியில் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
மறைந்த மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் வசித்து வந்த காலியில் உள்ள கபுஹெம்பல வீட்டிற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று காலை விஜயம் செய்தார். அந்த நேரத்தில் உள்ளூர்வாசிகள் வீட்டைச் சுற்றி திரண்டனர்.
விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு ரணில் விக்கிரமசிங்க புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு வந்திருந்த ஊர்மக்கள் சாப்பிட அரிசி இல்லை என்றும் தேங்காய் இருநூறு ரூபாவுக்கு உயர்ந்துவிட்டதாகவும் கூறினர்.
“எங்கள் நம்பிக்கை நீங்கள்தான் ஐயா,” என்று குடியிருப்பாளர்கள் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கிக் கூறினர்.
அப்போது ஒரு வரியில் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, “என்ன நடக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.