20.3 C
Scarborough

ஸ்மித்தையும் ஆஸி. அணியையும் சைகையில் கிண்டலடித்த கோஹ்லி

Must read

சிட்னியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் விராட் கோஹ்லி ஆஸி. அணியையும் ஸ்டீவ் ஸ்மித்தையும் கிண்டலடிக்கும் வகையில் தன்னிடம் சேண்ட் பேப்பர் (பந்தை சேதமடைய பயன்படும் மட்டை) இல்லை என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் 2ஆவது இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தபோதே கிண்டலடிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி, எப்போதும் ரசிகர்களுடன் பரபரப்பான உறவைக் கொண்டிருப்பார். அந்த வகையில் இப்போட்டியில் ஸ்மித் வெளியேறிய பிறகு, விராட் கோஹ்லி தன்னிடம் சேண்ட் பேப்பர் இல்லை என்று தனது பொக்கெட்களை ரசிகர்களிடம் காண்பித்து கேலி செய்தார்.

அவரது இந்த சைகைக்கு பார்வையாளர்கள் ஆர்ப்பரித்து கூச்சலிட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் கேமரூன் பான்கிராஃப்ட், போட்டியின்போது பந்தின் வடிவத்தை மாற்றியதால் தடைகளை எதிர்கொண்டார். அவருக்கு உதவியதாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவருமே கிரிக்கெட்டில் இருந்து ஓர் ஆண்டு தடை செய்யப்பட்டனர். அதேபோல் கோஹ்லியின் சைகை தற்செயலாக ஸ்மித்தின் வெளியேற்றத்துக்கு பின் வந்ததால் மைதானம் ஆரவாரமானது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article