16.8 C
Scarborough

திருச்செந்தூர் ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டமையால் சாரதிக்கு இடைக்காலத் தடை!

Must read

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரயில் நிலையம் வழியாக திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

ஆனால் தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரயில் நிற்காமல் சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரயில் என்ஜின் சாரதி ரயிலை பின்னோக்கி கொண்டு சென்றார்.  இதனால் ரயில் மீண்டும் தாதன்குளம் ரெயில் நிலையத்துக்கு சென்றது.

ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் இருந்து சென்ற பாலக்காடு ரயில்  நிலையத்தில் நிற்காமல் சென்ற காரணத்தினால் மீண்டும் பின்னோக்கி வந்தது.

அதனால், அந்த ரயில் என்ஜின் சாரதிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அதேபோல் இப்போது, பின்னோக்கி இயக்கப்பட்ட பயணிகள் ரயிலின் என்ஜின் சாரதியின் சேவைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article