நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கையின் அழகை மெருகூட்டும் இடங்களில் ஒன்றாக நுவரெலியா மாவட்டம் கருதப்படுகிறது இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் அதுவும் ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு விடுமுறை மற்றும் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நுவரெலியா பிரதான நகர் கிரகரி வாவி, ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றன மேலும் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து வருகின்றனர் .
இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் இதமான கால நிலையை அனுபவித்ததோடு பிரதான பூங்காக்களில் உள்ள புல் மைதானத்தில் ஓய்வெடுத்தும், அங்கு பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர் .
இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி நுவரெலியா – ஹட்டன் போன்ற பிரதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,

