தனது அறுவை சிகிச்சையின் போது உடல்நலம் குறித்து விசாரித்த மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எனது அறுவை சிகிச்சையின் போது எனது உடல்நலம் குறித்து விசாரித்து ஏராளமான குறுஞ்செய்திகளும், தொலைபேசி அழைப்புகளும் வந்தன. நான் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக கட்சி உறுப்பினர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ததை நான் அறிவேன். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க தற்போது ஓய்வெடுத்து வருவதுடன், அவர் விரைவில் குணமடைய வேண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்கள் வழிபாடுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

