4.9 C
Scarborough

தமிழக சட்டமன்றத் தேர்தல் – ஓய்ந்தது பிரச்சாரம்

Must read

இந்தியாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17வது பொது தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியான நாளை ஒரே கட்டமாக மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இதற்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி நேற்று (21) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இது தொடர்பாக இன்று (22) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்னாயக் தெரிவித்ததாவது,

”தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.‌

வாக்குப்பதிவு தருணத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் மத்திய ஆயுத படையினர் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக முழுவதும் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 5, 455 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதுவரை தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின் படி அமைக்கப்பட்ட பறக்கும் படை குழுக்கள் – இதுவரை வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 1, 262 கோடி மதிப்பிலான பரிசு பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கும் பன்னிரெண்டு ஆவணங்களை காண்பித்து வாக்குப்பதிவை மேற்கொள்ளலாம்” என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article