12 C
Scarborough

இஸ்ரேல் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

Must read

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இன்று (25) இஸ்ரேலுக்கு சென்றடைந்தார்.

இப் பயணத்தின்போது இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கவுள்ள மோடி, அந் நாட்டு பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

இச் சந்திப்பின்போது காஸா உள்ளிட்ட மத்திய கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் இஸ்ரேல் தலைவர்களுடன் பிரதமர் விவாதிக்கவுள்ளார்.

கடந்த ஒன்பது வருடங்களில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறையாகும்.

Previous article
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் நேற்று விளையாடின. இதில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், டி20 உலகக்கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அவர் 50 பந்துகளில் சதம் பூர்த்தி செய்துள்ளார். இதில், 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களும் அடங்கும். இதனால் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 என அனைத்து 3 வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த 3-வது இங்கிலாந்து வீரராக புரூக் உள்ளார். அந்த வகையில், ஜோஸ் பட்லர், டேவிட் மலான் முறையே ஒன்றாம் மற்றும் இரண்டாம் 2 இடங்களை பிடித்துள்ளனர். இந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. எனினும், இங்கிலாந்து அணி 19.1 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next article

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article