5.3 C
Scarborough

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!

Must read

இந்திய – இலங்கை கடல் எல்லையைத் தாண்டிச் சென்று, இலங்கை கடல் பரப்பில் மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை (20) விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய அவர்கள், அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

19 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது, மீனவக் குடும்பங்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article