21.8 C
Scarborough

அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணரின் மரணம் – கழுத்து நெரித்துக் கொலை என புலனாய்வுப் பிரிவு சந்தேகம்!

Must read

அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணரின் சடலம்,  புதன்கிழமை (17) கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது காதலன் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

எவ்வாறாயினும், சந்தேக நபர் குறித்த பல முக்கிய தகவல்களைப் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கொல்லப்பட்ட யுவதியிடம் சந்தேக நபர் தன்னை ‘தினேத் திஸாநாயக்க’ என அறிமுகப்படுத்தியுள்ளார். எனினும், அவரது தேசிய அடையாள அட்டையின்படி அவரது உண்மையான பெயர் ‘ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக்க ஸ்ரீயான் ஜயசுந்தர’ என்பதும், அவர் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தனது உண்மையான தோற்றத்தை மறைப்பதற்காக போலித் தலைமுடி  அணிந்திருந்ததோடு, பல யுவதிகளுடன் ஒரே நேரத்தில் உறவுத் தொடர்புகளை கொண்டு, பெண்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும் அம்பலமாகியுள்ளது.

43 வயதான, மூன்று பிள்ளைகளின் தந்தையான இந்த சந்தேக நபருக்கு எதிராக கம்பஹா, புதுக்கடை, திஸ்ஸமஹாராமய மற்றும் பாதுக்க ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்தமை தொடர்பாக சந்தேக நபருக்கு எதிரான பல புகார்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்துள்ளன. இந்த குற்றச் செயல்களுக்கு அவரது மனைவியும் ஆதரவளித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், தன்னை ஒரு மென்பொருள் பொறியியலாளர் என அவர் யுவதியிடம் கூறியுள்ள போதிலும், பெண்களை ஏமாற்றுவதற்காகவே அவர் அவ்வாறு பொய் கூறியுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article