6.7 C
Scarborough

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்கு பிணை!

Must read

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குருணாகல் – பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் திங்கட்கிழமை  (20) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வாகனப் பதிவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் கீழ், கடந்த மார்ச் 27 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  கைது செய்யப்பட்டார்.

ஒரு கெப்  ரக வாகனத்தின் சேஸிஸ் இலக்கத்தை  மாற்றி, அதனை மோசடியான முறையில் பதிவு செய்வதற்கு உறுதுணையாக இருந்தமை மற்றும் தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க,  திங்கட்கிழமை முற்பகல் பிலெஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டதுடன், இந்த வழக்கு பிலெஸ்ஸ நீதிவான் டப்ளியூ.எம்.எம்.ஐ. வாசல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றில் முன்வைத்த தகவல்களின்படி, கமல் அமரசிங்க குறித்த வாகனத்தைப் பதிவு செய்வதற்காக அதன் செஸி இலக்கத்தை மாற்றியமைப்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து ‘வாகன எடைச் சான்றிதழைப்’ பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் பொய்யான வாக்குமூலங்களை வழங்கி, மோசடியான முறையில் வாகனத்தைப் பதிவு செய்ய உதவி ஒத்தாசை வழங்கியமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள து

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article