6.7 C
Scarborough

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது – ஜப்பான் தகவல்

Must read

ஜப்பானில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, முதல் சுனாமி அலை நாட்டின் கடற்கரையை எட்டியுள்ளது என ஜப்பான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த முதல் அலை சுமார் 40 செ.மீ. உயரம் கொண்டதாக பதிவாகியுள்ளதாகவும், அது பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில், கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அடுத்தடுத்த அலைகள் அதிக உயரத்துடன் இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும், உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களை மட்டும் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article