அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தொடர்பில் ஈரான் இன்னும் எந்த இறுதி தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
ஈரானிய வெளிவிகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் இது தொடர்பில், “தற்போதைய நிலவரப்படி, அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கான எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்தக் குழுவில் மேற்காசிய நாடுகளுக்கான தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இடம்பெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இன்று திங்கட்கிழமை மாலை இஸ்லாமாபாத்தில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

