16.3 C
Scarborough

பீபா உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு தென் ஆபிரிக்கா முதல் தடவையாக தகுதி!

Must read

கனடா, மெக்ஸிகோ, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 23ஆவது பீபா உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஏ குழுவில் இடம்பெற்ற தென் ஆபிரிக்கா முதல் தடவையாக நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ளது.

தனது நான்காவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடும் தென் ஆபிரிக்கா, மொன்டெரே விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் தாப்பெல்லோ மசேக்கோ போட்ட கோல், தென் ஆபிரிக்காவின் வெற்றி கோலாக அமைந்தது.

தென் கொரிய ரசிகர்கள் நிரம்பி வழிந்த அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியது.

போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற அளவுக்கு இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன.

ஆனால், 63ஆவது நிமிடத்தில் தாப்பெல்லோ மசேக்கோ போட்ட கோல் தென் ஆபிர்க்காவை வெற்றி அடையச் செய்தது.

மெக்சிகோ 3 – செச்சியா 0

மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு ஏ குழு போட்டியில் செச்சியாவை (செக் குடியசரசு) 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மெக்ஸிகோ வெற்றிகொண்டது.

ஏற்கனவே நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்த நேற்றைய தினம் தனது 3ஆவது நேரடி வெற்றியை ஈட்டியது.

மெக்ஸிகோ சார்பாக மாட்டியோ சாவெஸ் (55 நி.), ஜூலியன் குவினோன்ஸ் (61), அல்வாரோ பிடல்கோ (90+4 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

ஹெய்டியின் சவாலை முறியடித்து மொரோக்கோ வெற்றியீட்டியது

அட்லான்டா விளையாட்டரங்கில் நடைபெற்ற சி குழு போட்டியில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஹெய்டியிடம் பின்னிலையில் இருந்த மோரோக்கோ மீண்டெழுந்து விளையாடி 4 – 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் மொரோக்கோ அடுத்த சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் யாசின் போனூ தவறுதலாக சொந்த கோல் ஒன்றை எதிரணிக்கு போட்டுக்கொடுத்தார்.

வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டயாத்தில் ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட பிரேஸில், போட்டி ஆரம்பித்து 7 நிமிடங்கள் ஆன நிலையில் வினிசியஸ் ஜூனியர் மூலம் முதலாவது கோலை போட்டது.

முதலாவது பகுதியின் உபாதையீடு நேரத்தில் வினிசியஸ் ஜூனியர் தனது இரண்டாவது கோலை போட இடைவேளையின்போது பிரேஸில் 2 – 0 என முன்னிலையில் இருந்தது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article