அமெரிக்காவில் குடியேற்ற நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக செல்லும் வெளிநாட்டினரை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் நடைமுறைக்கு சான் பிரான்சிஸ்கோ நீதிமன்ற நீதிபதி அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்ப் அரசின் இந்த கைது நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த வேளையிலேயே சான் பிரான்சிஸ்கோ நீதிமன்ற நீதிபதி கேசிபிட்ஸ், இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் முறையான திட்டமிடல்கள் இன்றி அரசு முன்னெடுக்கும் இத்தகைய கைது நடவடிக்கைக்கு நீதிபதி கண்டனமும் வெளியிட்டுள்ளார்
