விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச வழித்தடங்களில் நஷ்டம் ஏற்படுவதால், எதிர்வரும் ஜூலை மாதம் வரை சர்வதேச விமானச் சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா தீர்மானித்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவிக்கையில்,
ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் விமான நிறுவனம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி மூடலால் மேலும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான விமான அட்டவணையைத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
