10.4 C
Scarborough

மும்பை இந்தியன்ஸின் Play Off வாய்ப்பு கேள்விக்குறி!

Must read

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியிடம் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்த தொடரில் மும்பை அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் இது அவர்களின் 7வது தோல்வியாகும்.
குறித்த தோல்வியின் மூலம் 5 முறை செம்பியனான மும்பை அணியின் Play Off வாய்ப்பு மிகவும் மங்கிப் போயுள்ளதுடன், 9 போட்டிகளின் முடிவில் வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மும்பை அணியால் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.

ஐ.பி.எல். தொடரில் Play Off சுற்றுக்கு முன்னேற 16 புள்ளிகள் பாதுகாப்பானதாகக் கருதப்படும் நிலையில், மும்பை அணி தங்களின் Play Off வாய்ப்பைத் தக்கவைக்க எஞ்சிய 5 போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
அத்துடன், மற்ற அணிகளின் முடிவுகளையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி 8 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அவர்களைத் தொடர்ந்து ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article