12.1 C
Scarborough

ஈரான் போர் வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்துகிறது – சர்வதேச எரிசக்தி முகவரகம்

Must read

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையேயான போர், உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி வருகிறது என சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் தலைவர் ஃபாத்தி பிரோல் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள எச்சரிக்கை, உலகப் பொருளாதாரம் ஒரு மிகப்பாரிய ‘எரிசக்திப் போரை’ எதிர்கொண்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

ஃபாத்தி பிரோல் குறிப்பிடுவது போல, இன்றைய நெருக்கடி என்பது மூன்று பெரும் சிக்கல்களின் சங்கமமாகவுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பெற்றோல்  மற்றும் எரிவாயு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேன் போர் பாதிப்பினால் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் இயற்கை எரிவாயு விநியோகம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியானது 1973, 1979 மற்றும் 2022-ல் ஏற்பட்ட எரிசக்தி அதிர்ச்சிகளை ஒன்றாக இணைத்தது போன்ற ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மொத்த மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) ஹோர்முஸ் நீரிணை வழியாகவே பயணிக்கிறது.

ஈரானால் இந்த நீரிணை மூடப்பட்டுள்ளதால், விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 120 டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது உலகளாவிய பணவீக்கத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

சந்தையை நிலைப்படுத்த, மார்ச் மாதத்தில் சர்வதேச எரிசக்தி முகவரகம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய நடவடிக்கையாக 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை தனது மூலோபாய இருப்புக்களில் இருந்து வெளியிட ஒப்புக்கொண்டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article