தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘நாம் தமிழர் கட்சி’ மற்றும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ இடையிலான கூட்டணி குறித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெளிவான விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சீமானிடம், “நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஏன் கூட்டணி அமையவில்லை?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர்,
நான் நடிகர் விஜய்யைப் போல பொழுதுபோக்குத் தளத்தில் தேடப்படுபவன் அல்ல. என்னைத் தேடுபவர்கள் அறிவுப்பூர்வமான தேடல் உள்ளவர்களாக இருப்பார்கள். அத்தகைய ஆழமான தேடல்களைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே எனது கைகளைப் பிடிப்பார்கள்,” என அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தனது கட்சியின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், “எங்களது கொள்கை ரீதியான பயணத்தில் வெற்றி என்பது சற்றே தள்ளிப்போகலாம். ஆனால், அந்த வெற்றி ஒருபோதும் மாறாது. காலதாமதம் ஆனாலும் இலக்கை அடைவது உறுதி,” எனத் தனது அரசியல் தன்னம்பிக்கையை வௌிப்படுத்தினார்.

