முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி இன்று (28) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தார்.
அதன்படி, ஆணைக்குழுவில் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
