9.3 C
Scarborough

அமெரிக்க அஞ்சல் சேவைக்கு செலுத்திய 6 இலட்சம் டொலர் காணாமல் போயுள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

Must read

அமெரிக்க அஞ்சல் சேவைக்கு  இலங்கை அஞ்சல் திணைக்களம் செலுத்தியதாகக் கூறப்படும் மேலும் 600,000 அமெரிக்க டொலர் தொகை கிடைக்காத விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (28) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த தொகை தமக்கு கிடைக்கவில்லை என அமெரிக்க அஞ்சல் சேவை முன்வைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அதனுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களும் ஆய்வு செய்யப்படுவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்கள் விசாரணை முன்னேற்றத்தின் அடிப்படையில் பின்னர் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article