இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88,000-ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தரவுகளின்படி, இம்மாதத்தில் இதுவரை மொத்தம் 88,221 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.
இதில் 25,634 (29%) பயணிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 828,845 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

