10.1 C
Scarborough

இணையவழி நிதி மோசடிக்குத் திட்டம் – இலங்கை வந்த 9 சீனர்கள் கைது

Must read

இலங்கையில் இணையவழியில் நிதி மோசடிகளில் ஈடுபடுவதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 9 சீனப் பிரஜைகள், சுமார் 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களுடன் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சீனா ஈஸ்டர்ன் விமான சேவையின் MU-6912, எயார் சீனாவின் CA-425 மற்றும் எயார் ஏசியாவின் FD-047 ஆகிய விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின்போது, அவர்கள் தங்களது உடலிலும் ஆடைகளுக்குள்ளும் செலோடெப்  மூலம் ஒட்டி மறைத்து வைத்திருந்த 383 பயன்படுத்தப்பட்ட கைத்தொலைபேசிகள், 101 டெப் கணினிகள்  மற்றும் 6 வைஃபை ரவுட்டர்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளைத் தடுப்புக் காவலில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article