10.6 C
Scarborough

அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்!

Must read

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் புதன்கிழமை (29) வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டியமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை  ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் இன்று (27)  கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் (25) சனிக்கிழமை யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பாக ஏற்பட்ட தகராறே இதற்குக் காரணமாகும்.

குறித்த காணியை பாராளுமன்ற உறுப்பினர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அக்காணி தமக்குச் சொந்தமானது என உரிமை கோரியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் காட்டி ஒரு பெண்ணை அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட காணியின் உரிமை தொடர்பாக ஏற்கனவே நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அக்காணி தனக்குரியது என உரிமை கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பு அதனை எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article